விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா? யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம் செய்யலாமா? மறுமணம், வேதம் போதிப்பது என்ன? இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும். தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்
சாம்பற் புதன் www.sinegithan.in 'லெந்து நாட்கள்' என்று அழைக்கப்படும் 40 நாட்கள், இயேசு கிறிஸ்து ரோமப் போர்ச்சேவகர்களால் பிடிக்கப்பட்ட, பாடுபடுத்தப்பட்ட, சிலுவையில் அறையப்பட்ட, மரித்த நாட்களாகவும், அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிறு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாகவும் கிறிஸ்தவர்களால் சந்ததி சந்ததியாக ஆசரிக்கப்பட்டுவருகின்றன; இந்நாட்களின் தொடக்க நாளே 'சாம்பற் புதன்' என்று அழைக்கப்படுகின்றது. என்றபோதிலும், 'சாம்பற் புதன்' என்றால் என்ன? என்றும், அது எங்கே? எப்படி? யாரால் தொடங்கப்பட்டது? என்றும், 'லெந்து நாட்கள்' என்பது, ஏன் 40 நாட்களாக ஆசரிக்கப்படுகின்றன?' என்பதின் உண்மையை நாம் அறிந்துகொள்வது அவசியமல்லவா! 'அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று' (மத். 4:1,2) என்று இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தொடக்கத்தை பரிசுத்த வேதம் எடுத்துக்கூறினாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளுக்கும், இந்த நாற்பது நாட்களுக்கும்