Skip to main content

சாம்பற் புதன்


சாம்பற் புதன்

www.sinegithan.in



'லெந்து நாட்கள்' என்று அழைக்கப்படும் 40 நாட்கள், இயேசு கிறிஸ்து ரோமப் போர்ச்சேவகர்களால் பிடிக்கப்பட்ட, பாடுபடுத்தப்பட்ட, சிலுவையில் அறையப்பட்ட, மரித்த நாட்களாகவும், அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிறு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாகவும் கிறிஸ்தவர்களால் சந்ததி சந்ததியாக ஆசரிக்கப்பட்டுவருகின்றன; இந்நாட்களின் தொடக்க நாளே 'சாம்பற் புதன்' என்று அழைக்கப்படுகின்றது. என்றபோதிலும், 'சாம்பற் புதன்' என்றால் என்ன? என்றும்,  அது எங்கே? எப்படி? யாரால் தொடங்கப்பட்டது? என்றும், 'லெந்து நாட்கள்' என்பது, ஏன் 40 நாட்களாக ஆசரிக்கப்படுகின்றன?' என்பதின் உண்மையை நாம் அறிந்துகொள்வது அவசியமல்லவா! 

'அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று' (மத். 4:1,2) என்று இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தொடக்கத்தை பரிசுத்த வேதம் எடுத்துக்கூறினாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளுக்கும், இந்த நாற்பது நாட்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது நிச்சயம். இயேசு கிறிஸ்துவுடன் கூட இருந்த சீஷர்களின் ஊழிய அனுபவங்களிலும், இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைச் சுட்டிக்காட்டும் சுவிசேஷங்களிலும், அப்போஸ்தலர்களின் அஸ்திபார உபதேசங்களிலும், அன்றாட போதனைகளிலும் மற்றும் நடபடிகளிலும், ஆதித் திருச்சபைகளிலும் மற்றும் ஆதி விசுவாசிகளின் வாழ்க்கைமுறைகளிலும் கடைபிடிக்கப்படாத இந்த 'பழக்கம் இன்றைய நாட்களில் புழக்கத்தில் வந்தது எப்படி?' இயேசு கிறிஸ்துவையே நினைவில் கொண்டு, அவரது பாடுகளை மனதில் கொண்டு இந்த நாற்பது நாட்களை நாம் அனுசரித்தாலும், அவருடைய பாடு மரணங்களை பல மணி நேரம் தியானித்தாலும், 'இந்த நாற்பது நாட்கள்' துக்கம் தொடங்கினதின் மறுபக்கத்தையும், அது யாருக்காக அனுசரிக்கப்பட்டது? என்பதின் ஆரம்பத்தையும் நாம் அறிந்துகொள்வது அவசியமல்லவா? இதனைப் புரிந்துகொள்ள, சில வரலாற்றுப் பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கவேண்டியதும் அவசியமே. 

நோவாவின் குமாரர்களை 'சேம், காம், யாப்பேத்' என்ற வரிசையில் வேதாகமத்தின் பல பகுதிகளில் நாம் வாசித்தாலும் (ஆதி. 6:10; 7:13; 9:18,23; 10:1,21; 1நாளா. 1:4), ஆதியாகமம் 10-ம் அதிகாரத்தின் சரித்திரத்தினையும், ஆதியாகமம் 9:24-ல் 'இளையகுமாரன்' என்று காம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதினாலேயும், அவர்களது வரிசை, யாப்பேத், சேம், காம் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும். காமின் குமாரனான கூஷ், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்ற குமாரர்களைப் பெற்றதைத் தொடர்ந்து, கூஷின் குமாரர்களுள் ஒருவனான ராமாவுக்கும் சேபா, திதான் (ஆதி 10:7) எனற குமாரர்கள் பிறந்த பின்பு, கூஷ் தனது வயதான நாட்களில் மற்றொரு மனைவியைச் சேர்த்துக்கொண்டு அவளிடத்தில் 'நிம்ரோத்தைப்' பெற்றான் என்றும், தனது வயதான நாட்களில் அவனைப் பெற்றதினால், அவன் மீது கூஷ் அதிகமான அன்பு கொண்டிருந்தார் என்றும் யாசேரின் புத்தகத்தில் வாசிக்க முடியும் (யாசேர் 7:23). வயதான நாட்களில் கூஷ் மணமுடித்துக்கொண்ட மனைவியின் பெயரை 'சிமிராமிஸ்' என்று கூறுகிறது வரலாறு. 

ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் உடுத்துவிக்கும்படி தேவனால் உண்டாக்கப்பட்ட தோலுடைகள், ஏதேன் தோட்டத்தை விட்டு அவர்கள் வெளியேறியபின் அவைகள் சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத் என்பவர்களைக் கடந்து, ஏனோக்கின் வசத்தில் வந்து சேர்ந்தன என்றும், ஏனோக்கு தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டபின் அவைகள் மெத்தூசலாவை வந்தடைந்தன என்றும், மெத்தூசலாவின் மரணத்திற்குப் பின் அவைகள் நோவாவினிடத்தில் காணப்பட்டன என்றும்,  பேழைக்குள் எடுத்துச்செல்லப்பட்டன என்றும், நோவா பேழையிலிருந்து வெளியேறிய நேரத்தில் திராட்சரசத்தினால் வெறிகொண்டிருந்தபோது அவைகள் நோவாவின் இளையகுமாரனான காமினால் திருடப்பட்டன, இதுவே காம் சபிக்கப்பட்டதற்குக் காரணம் என்றும், காமினைத் தொடர்ந்து அவைகள் காமின் முதல் குமாரனான கூஷினிடத்தில் கொடுக்கப்பட்டன என்றும், கூஷ் தனது வயதான நாட்களில் நிம்ரோதைப் பெற்றதினாலும், அவன் மீது அதிக பிரியம் வைத்திருந்ததினாலும் அவைகளை நிம்ரோத்திற்குக் கொடுத்தான் என்றும் யாசேரின் புத்தகத்தின் சரித்திரம் கூறுகின்றது.  (யாசேர் 7:23-29)

காமின் குமாரனான கூஷ;-ன் மகன் 'நிம்ரோத்' நல்லதோர் வேட்டைக்காரனாயிருந்தான். ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று (ஆதி. 10:9) என்று இவனைக் குறித்து வேதமும் கூறுகின்றது. காட்டு மிருகங்களை வேட்டையாடி, பலிபீடங்களைக் கட்டி, அவைகளை கர்த்தருக்கும் பலியிட்டுவந்தான். தன்னையும் மற்றும் தனது சகோதரர்களையும் எதிர்க்கும் சத்துருக்களோடு போராடி வெற்றியும்கண்டான் நிம்ரோத் (யாசேர் 7:30,31). நிம்ரோத் 40 வயதாயிருக்கும்போது, யாப்பேத்தின் பிள்ளைகள் நிம்ரோத்தின் சகோதரர்களுக்கு விரோதமாகப் போரிடப் புறப்பட்டுவந்த நேரத்தில், நிம்ரோத், கூஷின் குடும்பத்தைச் சேர்ந்த 460 பேரையும் மற்றும் கூலிக்கு அமர்த்திக்கொண்ட பிற மனிதர்களாகிய 80 பேரையும் தன்னுடன் அழைத்துச் சென்று, எதிர்த்து வந்த சத்துருக்கள் மீது மாபெரும் வெற்றியினைப் பெற்றான்; எதிரிகளில் சிலரை வேலையாட்களாகவும் பிடித்துக்கொண்டுவந்தான். நிம்ரோத்தின் இந்த துணிவையும், போர் திறமையையும் கண்ட நிம்ரோத்தின் சகோதரர்கள், தங்களை அரசாளும் ராஜாவாக அவனை எல்லாருக்கும் லோக உயர்த்தி, அவனது தலையின் மேல் ராஜ கிரீடத்தையும் அணிவித்து மகிழ்ந்தனர் (யாசேர் 7:34-40). காமின் குமாரனனும், கூஷின் மகனுமான நிம்ரோத் அரசனானதும், அரியணை ஏறியதின் சரித்திரமும் இதுவே! நிம்ரோத் 185 ஆண்டுகள் தனது ஜனத்தின் மேல் ஆட்சிபுரிந்தான் (யாசேர் 27:16). சத்துருக்களின் கைகளிலிருந்து தனது ஜனத்தை பாதுகாத்துவந்தான். 

முதல் மனிதனாகிய ஆதாம் முதல் நிம்ரோத் வரையிலான வரலாற்றினை வேதாகமத்திலுள்ள நாளாகமப் புத்தகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றதே (1நாளா. 1:1-12). சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே இவன் ஆண்டுவந்தான் (ஆதி. 10:10) என்றும், அவைகள் 'நிம்ரோதின் தேசம்' என்றே அழைக்கப்பட்டன (மீகா. 5:6) என்றும், நினிவே, ரெகொபோத், காலாக், ரெசேன் போன்ற பட்டணங்களை அவன் கட்டினான் என்றும் (ஆதி. 10:11,12), மிஸ்ராயீம், லூதீம், அனாமீம், லெகாபீம், நப்தூகீம், பத்ருசீம், பெலிஸ்தியரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீம் மற்றும் கப்தொரிம் ஆகியோரைப் பெற்றான் என்றும் வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே (ஆதி. 10:13-14). 

நிம்ரோத் அரசனாக ஆட்சிபுரிந்துகொண்டிருந்த நாட்களில், நாகோரின் குமாரன் தேராகை (ஆதி. 11:24) தனது ராஜ்யத்தில் எல்லா ஜனத்திற்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் மேலாக உயர்த்திவைத்திருந்தான் நிம்ரோத் (யாசேர் 7:41). இந்த நாட்களில், பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், (தற்போது ஈராக் என்று அழைக்கப்படுகின்ற) சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டதுடன் (ஆதி. 11:1-4), அதை நிறைவேற்றவும் தொடங்கினார்கள்; 'நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போதபடிக்கு' என்றும் 'நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம்' என்றும் ஜனங்கள் செய்யத்தொடங்கின இந்தக் காரியம், கர்த்தரின் பார்வைக்கோ தகாததாயிருந்தது. எனவே, நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்கிறார் ஆண்டவர்.(ஆதி 11:7)

  நிம்ரோத்தின் ஆட்சிக்குட்பட்ட ஜனங்களிடத்தில் மாத்திரமல்ல, அரசான நிம்ரோத்தின் வாழ்க்கையிலும் ஆண்டவருக்கு விரோதமான போக்கு ஆரம்பமாகத் தொடங்கியது. ஆண்டவரை மறந்து, ஆங்காங்கே இருக்கும் கற்களையும் மற்றும் மரங்களையும் கடவுளாக வணங்கத் தொடங்கினான். தான் வணங்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது ராஜ்யத்திற்குட்பட்ட ஜனங்களையும் அத்தகைய வணக்கத்திற்கு நேராக வழிநடத்தினான். நிம்ரோத்-ன் மகனான 'மாரடோன்' தனது தகப்பனைக் காட்டிலும் அதிகமான தீமைகளை தேவனுக்கு விரோதமாகச் செய்துவந்தான் (யாசேர் 7:47). நிம்ரோத்தின் வாழ்க்கை முற்றிலும் தேவனை விட்டு விலகிப் போயிருந்த நாட்களில், தனது தகப்பனாகிய கூஷ் மரித்ததைத் தொடர்ந்து, தனது தாயைப் போன்ற அழகான ஒரு பெண்ணைத் தேடிய நிம்ரோத், அது கிடைக்காததினால், தனது பெற்ற தாயாகிய 'சிம்ராமிஸை' தனக்கு மனைவியாக்கிக்கொண்டான் என்பது சரித்திரம் கூறும் வரலாறு. 

அரசனானபோதிலும், வேட்டையாடும் தனது பழக்கத்தை நிம்ரோத் விட்டுவிடவில்லை. நிம்ரோதின் வயதான நாட்களில், ஈசாக்கின் குமாரனான ஏசாவும் வேட்டையாடுவதில் வல்லவனாயிருந்தான்; நிம்ரோத் காட்டிற்குச் சென்று வேட்டையாடும் நேரங்களில், ஏசாவை காணும்போதெல்லாம் அவன் மீது எரிச்சலைந்துவந்தான் (யாசேர் 27:3). ஒருநாள் வேட்டையாடும்படியாக நிம்ரோத் வனத்திற்குச் சென்றிருந்தபோது, வேட்டையாடும்படியாக நிம்ரோத்துடன் வந்திருந்த மற்ற மனிதர்கள், அவனை விட்டு சற்று விலகிச் சென்றிருந்த வேளையில், இரண்டு மனிதர்களுடன் மாத்திரம் வனத்தில் நிம்ரோத் நடந்துகொண்டிருப்பதைக் கண்ட ஏசா, அந்த இரண்டு மனிதர்களும் சற்று அப்புறமாகச் சென்ற நேரத்தில், தான் மறைந்திருந்த இடத்திலிருந்து தந்திரமாக எழுந்து சென்று பட்டயத்தினாhல் நிம்ரோத்தின் தலையைத் துண்டித்துப்போட்டதுடன் (யாசேர் 27:5-7), சற்று நேரத்தில் அங்கு வந்த நிம்ரோத் உடனிருந்த இரண்டு மனிதர்களோடும் கடுமையாகப் சண்டையிட்டு அவர்களையும் வீழ்த்திவிட்டு, கூஷ் தனது குமாரனான நிம்ரோத்திற்குக் கொடுத்திருந்த 'உடைகளை' (ஆதாம் ஏவாளுக்கு ஆண்டவர் செய்த தோலுடைகள்) நிம்ரோத்தினிடத்திலிருந்து எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்று, அதனை தனது வீட்டில் மறைத்துவைத்தான். (யாசேர் 27:10) 

ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன். இதோ, நான் சாகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு  (ஆதி 25:29,30,32) என்று சொல்லும் நிகழ்வு 'ஏசா நிம்ரோத்தை கொன்றுவிட்டு வந்தபோது' நடைபெற்றதே (யாசேர் 27:10-12). நிம்ரோத் 215 வருடங்கள் உயிரோடிருந்தான் (யாசேர் 27:15). ஆபிரகாமின் பிறப்பின்போது, ஞானிகள் முன்னறிவித்ததின்படி, ஆபிரகாமின் வித்தாகிய ஏசாவினால் நிம்ரோத் கொல்லப்பட்டான் என்பது யாசேர் புத்தகம் நமக்குச் சொல்லும் கூடுதல் செய்தி (யாசேர் 27:16; 7:50,51; 8:13). கி.மு 1880-ம் ஆண்டு, ஏசா 16 வயதாயிருக்கும்போது, நிம்ரோத்தை கொன்றான் என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றனர்; அப்போது அவனுக்கு வயது 215; அப்படியென்றால், நிம்ரோத் பிறந்த ஆண்டு கி.மு 2095 என்பதையும் நாம் கணக்கிட்டுக்கொள்ளமுடியுமே! 

நிம்ரோத் மரணமடைந்ததும், ஆட்சி அரியணையில் அமர்ந்த நிம்ரோத்தின் தாயும் மனைவியுமான சிம்ராமிஸ்,  நிம்ரோத்தை சூரியனாகவும், தன்னை சந்திரனாகவும் அறிமுகப்படுத்தி ஜனங்களை வணங்கும்படிச் செய்தாள். 'மோளேகு' என்றும், 'அஸ்தரோத்' என்றும் 'தியானாள்' என்றும் பல்வேறு மறு பெயர்களில் சிம்ராமிஸைக் குறித்தும் 'பாகால்' என்ற பெயரில் நிம்ரோத்தைக் குறித்தும் வேதத்தில் நாம் வாசிக்க முடியும். சில நாட்களுக்குப் பின், தவறான உறவினால் கர்ப்பமடைந்த 'சிமிராமிஸ்', அதனை மறைக்கும்படியாக, 'நிம்ரோத்தின் சூரியக் கதிர்கள் தன் மீது பட்டதினால், தான் கருவுற்றிருப்பதாக' ஜனங்களை நம்பச் செய்ததுடன், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு 'தம்மூஸ்' என்றும் பெயரிட்டாள். தம்மூசும் தகப்பனைப் போலவே வனத்திற்குச் சென்று அடிக்கடி வேட்டையாடுகிறவனாகக் காணப்பட்டான். 

40 வயதாயிருக்கும்போது, தம்மூஸ் காட்டுப்பன்றியினால் தாக்கப்பட்டு உயிரிழந்தான். தம்மூஸ் செத்துக்கிடந்த இடத்தில், அவனது சரீரத்திலிருந்து சிந்திய ரத்தத்தினால் பட்டுப்போன மரம் பசுமையாகத துளிர்விட்டு வளர்ந்தது என்றும் ஜனங்களை நம்பச் செய்து, வருடா வருடம் ஜனங்கள் அதனை அலங்கரித்து மகிழும்படிச் செய்தாள்; இன்று கிறிஸ்தவர்கள்  அலங்கரித்து ஆராதிக்கும் 'கிறிஸ்மஸ் மரத்தின்' தொடக்கமும் இதுவே. 40-வது வயதில் தம்மூஸ் உயிரிழந்ததினால், தன் ராஜ்யத்திலிருக்கும் ஜனங்கள் அனைவரும் தம்மூசிற்காக ஒவ்வொரு வருடமும் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கவேண்டும் என்று ஆணையிட்டாள் சிமிராமிஸ். இந்த நாற்பது நாளுக்கான தொடக்கத்தை, தங்கள் நெற்றிகளில் 'தம்மூசின் பெயரால் சாம்பலைப் பூசிக்கொண்டு' துக்கநாட்களாக, எவ்வித மகிழ்ச்சியான காரியங்களையும் கைக்கொள்ளாமல் ஆசரித்துவந்தார்கள். மேலும், தாயும் பிள்ளையும் இருப்பதைப் போன்ற சிற்பங்களைச் செய்தும் ஜனங்கள் வழிபடத் தொடங்கினர். இதுவே 'சாம்பற்புதனாக' அவர்களால் தொடர்ந்து ஆசரிக்கப்பட்டுவந்தது. பாபேல் கோபுரம் கட்டப்பட்டபோது, பாஷைகளை ஆண்டவர் தாறுமாறாக்கினதினால், வௌ;வேறு இடங்களுக்குச் சிதறிச் சென்ற ஜனங்கள், தாங்கள் பேசும் பாஷைகளில், வெவ்வேறு பெயர்களில் 'சிம்ராமிஸை' வழிபடத் தொடங்கினர். பல்வேறு இடங்களிலும் மற்றும் தேசங்களிலும் பெண் தெய்வங்கள் மற்றும் சிங்கங்களின் மேலிருக்கும் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் சிம்ராமிஸையே குறிக்கின்றன. 

சிமிராமிஸ் கருத்தரித்த தினத்தையே 'ஈஸ்டர்' என்று கொண்டாடிவந்தார்கள் பாபிலோனியர்கள். இதுவே 'ஈஸ்டர்' தினத்தன்று ஜனங்கள் அலங்காரம் செய்த முட்டைகளைக் கொடுத்து மகிழ்வதற்கானக் காரணம். 'முட்டையும் முயலும்' இனப்பெருக்கத்தின் அடையாளங்களாகவே கருதப்படுபவை. 'ஈஸ்டர்' தினத்தன்று, சிம்ராமிஸ்-ன் கோவிலுக்குள் வரும் ஆடவர்கள், அங்கிருக்கும் பெண்களோடு உடலுறவில் ஈடுபட்டுவந்ததோடு, 9 மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை, அடுத்த ஆண்டு 'ஈஸ்டர்' தினத்தன்று பலியாகவும் செலுத்திவந்தார்கள். கோவில்களில் தேவதாசி முறை உண்டானதின் வரலாறும் அத்துடன் நரபலி செலுத்தப்பட்டதின் வரலாறும் இதுவே. 'கிறிஸ்மஸ்' 'கிறிஸ்து' என்று உதட்டளவில் உச்சரிக்கப்பட்டாலும், சத்துருவின் சூழ்ச்சியில் எத்தனையாய் சிக்கிக்கிடக்கின்றது இன்றைய கிறிஸ்தவ உலகு, என்பதை நினைக்குங்கால் வேதனையே மிஞ்சுகிறது. 

இந்தத் தீமையையே, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தர் வேதத்தில் எழுதிவைத்திருக்கின்றார், பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி, என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள் (எசே. 8:13-16) என்று வாசிக்கின்றோமே. இவை அனைத்தும் வெளிப்படுத்துவது, 'நிம்ரோத்' 'சிமிராமிஸ்' 'தம்மூஸ்' வழிபாட்டினையே!  















 

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க