எவ்விதத்திலும் நம்மை மோசம்போக்கவேண்டும் என்ற சாத்தானின் தந்திரமே, JESUS என்று எழுதப்பட்டிருக்கும் மீன் வடிவ சாவிக்கொத்து. எகிப்திய, பெலிஸ்திய, கிரேக்க மற்றும் ரோம மீன் வடிவ கடவுளுடன் இயேசுவை மறைமுகமாக ஒப்பிட்டும், உலகிற்கே தாய் (Mother God) என்று வணங்கப்படும் பாபிலோனிய பெண் தெய்வத்தை மீன் வடிவத்தால் அடையாளம் காட்டும் வண்ணமாகவும், நிலவு தெய்வமாகக் (Moon God) கருதப்பட்ட அதனை இரண்டு பிறைகள் பின்னிக் கிடப்பதைப் போன்றும் வடிவமைக்கப்பட்டு உலகினுள் நுழைக்கப்பட்டிருக்கும் இவ்வித அருவருப்புகளைக் கண்டு அகன்று செல்வதும், அகற்றிவிடுவதும் நம்முடைய கடமை. வாகனத்தையும், வீட்டு வாசலையும், அலுவலகத்தையும் தாகோனைக் கொண்டே திறக்கிறீர்கள் என்ற திருட்டுத்தனமான திட்டத்திற்குத் துணைபோய்விடாதீர் ஆலயத்தின் வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் மீன் வடிவத்தில் உருவாக்கப்படுவதும், ஆயர்களின் தொப்பிகள் வாயைத் திறந்த மீனைப் போல வடிவமைக்கப்படுவதும் இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியே. எய்ட்ஸ் பிரச்சாரத்திற்கும் இத்தகைய சின்னமே உபயோகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மீன்களை இணைத்து வைப்பதினாலேயே, காதலர்களுக்கு ஆர்ட்டின் சின்னம் வந்தது, அதனுடன் அம்பும் இருப்பது அருவருப்பு. அன்பை வெளிக்காட்டுவதற்காகவும், அன்பின் அடையாளமாகவும் கிறிஸ்தவர்களும் கூட இதனைப் பயன்படுத்துவது வேதனையானது. இத்தகைய சின்னமுடையவைகளை சாவிக்கொத்தை வாங்காமலும், உபயோகிக்காமலும் இருப்போம். ஆரோனின் தiலில் இருந்த தலைப்பாகை இத்தகையது அல்ல, இது பாபிலோனின் தரையிலிருந்து தலைக்கு ஏறியது.
Comments
Post a Comment