Skip to main content

பச்சை குத்திக்கெர்ளளலாமா?

 



போகுமிடமெல்லாம் போலியாகவே மனிதர்களோடு ஒட்டிக்கொள்ள விரும்புபவன் சாத்தான். 'தேவ ஆட்டுக் குட்டியாக (யோவான் 1:36) இயேசு வந்தார்' அந்த உருவத்தையே அந்திக்கிறிஸ்துவுக்கு (baphomet) அடையாளமாக்கிக்கொண்டான் சாத்தான். 'தேவன் ஒளியாயிருப்பதால்' (1யோவான் 1:5) அவனும் ஒளியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டான் (2 கொரி. 11:14). 'பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்' (வெளி. 22:16) என்று அவரைக் குறித்தும், 'அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே' (ஏசா. 14:12) என்று அவனைக் குறித்தும் வேதம் வேறுபிரித்துக் காட்டிக்கொடுக்கிறதே. 

'பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு' (எசே 9:4) என்றார் ஆண்டவர்; ஆபேலைக் கொலை செய்த காயீன், தண்டனைக் குறியவனாக இருந்தபோதிலும், உயிரை தப்புவிப்பதற்காகவே அவனுக்கு அடையாளமிட்டார் ஆண்டவர். ஆனால், சாத்தானோ, 'அழிந்துபோகிறவர்களை அடையாளமிட்டான்' (வெளி. 13:16-18). சாத்தானின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள் (வெளி 19:20). பாதாளக்குழியிலிருந்து புறப்பட்டு வந்த வெட்டுக்கிளிகளுக்கு, தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த உத்தரவு கொடுக்கப்பட்டது (வெளி. 9:4). மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும், அதின் முத்திரைக்கும், அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு' (வெளி.15:2) நின்றார்கள்; தேவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். 

அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் (வெளி 22:4, 14:1) என்பது தேவனது விருப்பம்; பசும்பொன்னினால் பட்டத்தைப் பண்ணி அதில் 'பரிசுத்தம்' என்றெழுதி ஆரோனை நெற்றியில் தரித்துக்கொள்ளச் செய்தார் கர்த்தர் (யாத். 28:36-38). ஆனால், மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் (வெளி 17:5) எழுதியிருக்கும்படி அநேகரை அபகரித்துக்கொண்டான் சாத்தான். 'சரீரம் மண்ணுக்கு' என்பதையே அழுத்திச் சொல்லி, மண்ணுக்கு போவதற்கு முன் அது 'விண்ணவரின் ஆலயம்' என்பதை மறந்துவிட்டனர் பலர். மனம் மட்டுமல்ல மயிருங்கூட எண்ணப்படுகிறது (மத். 10:30) என்ற அறிவு அவசியமானதல்லவோ. 

கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தையே ஆலயம் என்றும், சரீரத்தையோ தேவனுடைய ஆலயமாக பாவிக்க மறந்துவிடுவோரும் அநேகர். கைகளினால் கட்டப்பட்டதற்கு அல்ல, இரத்தத்தினால் கழுவப்பட்ட சரீரமாகிய ஆலயத்திற்கல்லவோ முக்கியத்தும் கொடுக்கப்படவேண்டும். கைகளினால் கட்டப்பட்டதை பரிசுத்தமாக வைத்துக்கொண்டு, சரீரமாகிய ஆலயத்தை அருவருப்பாக்கினால் அடிக்கப்பட நேரிடும். அவருடைய வீட்டை கள்ளர் குகையாக்கவேண்டாம். நிழழாட்டமானதை பிடித்துக்கொண்டு, நிரந்தரமானதை இழந்துவிடவேண்டாம். ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். (1கொரி 3:17) 

நாம், பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டிருக்கிறோம் (எபே. 1:13). சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார் (ஆகா 2:23). மற்றவர்களை முத்திரையிடும் மோதிரங்கள் நாம் என்கிறது வேதம். அப்படியே, சாத்தானைக் குறித்தும், 'நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்' (எசே. 28:12) என்று வாசிக்கிறோமே. இதையே யோயாக்கீமின் கோனியாவுக்கும் சொல்லி எச்சரித்து எதிர்த்து நிற்கிறார் (எரே. 22:24). ஆண்டவருடையதையும், சத்துருவினுடையதையும் வேறுபிரித்து கண்டுகொள்ளக்கூடிய அறிவு தேவை. பாவங்களில் பறிகொடுத்துவிட்டால், 'இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும்' என்று (ஆதி 38:25) விலையுயர்ந்ததை விட்டுவிட்டுச் சென்ற யூதாவை தாமார் பிடித்ததுபோல நாமும் பிடிபட்டுவிடுவோம். யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர், ஜனங்களுக்கு அடையாளமிடும் வழக்கமுடையவனாயிருந்தான். 

'உன்னதமானவருக்கு ஒப்பாவேன்' (ஏசா. 14:14) என்ற எண்ணத்தில், போலியாகவே வலம் வரும் அவனது விளையாட்டுக்களில் வீழ்ந்துபோகாதபடிக்கு கவனமாயிருப்போம். செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர் (லேவி 19:28) என்ற கட்டளை நமக்கு உண்டு. காதலர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களின் பெயர்களை பச்சை குத்தினவர்களாக அவனது வசத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாலிபர்கள அநேகர் உண்டே. நிரந்தரமானதாக அவைகள் இருப்பினும், மனந்திரும்புதலினால் அவைகளை நிக்கிரகம் பண்ணமுடியும். பச்சை குத்திக்கொள்ளுதல், பரிசுத்த குலைச்சலே 

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க