Skip to main content

யார் இந்த ஆறுமுகநாவலர்?

 




'தமிழும் சைவமும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துக்கொள்வதே என் கடமை' என்று வழ்ந்தவர் ஆறுமுக நாவலர். இலங்கை தேசத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் என்னும் ஊரில் 18 டிசம்பர் 1822 அன்று கந்தப்பாப்பிள்ளை, சிவகாமி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தார்; இவரது இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை. ஐந்து வயது முதல், நல்லூரிலுள்ள சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் தமிழைக் கற்கத் தொடங்கினார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். பன்னிரெண்டாவது வயதில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆங்கில மிஷனரி பள்ளியான மெதடிஸ்ட் ஆங்கில பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது அறிவுத் திறனைக் கண்ட மிஷனரிகள், ஜாஃப்னாவிலுள்ள மிஷனரி பள்ளியில் ஆசிரியராக அவரை பணியில் அமர்த்தினர். 19 ம் வயதில், அப்பள்ளியின் முதல்வராயிருந்த மிஷனரி பீட்டர் பெர்சிவல் உடன் இணைந்து ஆங்கில வேதாமத்தை (KJV 1611) தமிழில் மொழியாக்கம் செய்யும் பணியில், 1841 முதல் 1848 வரை ஈடுபட்டார். ஆறு பேரைக் கொண்ட குழுவினர் செய்த மொழியாக்கத்திற்கு தலைமை வகித்தார். தமிழ் வேதாகமத்தில் காணப்படும் 'தேவன்' 'கர்த்தர்' போன்ற வார்த்தைகள் இவரால் புனையப்பட்டவைகளே. சைவ சமயத்தில் மிகுந்த பக்தி வைராக்கியம் கொண்டிருந்த இவரது தாயார், "யெகோவா" என்ற பெயரை வேதத்தில் உபயோகிக்காமல், அதற்கு இணையான சொற்களை உபயோகிக்கும் படி தனது மகன் ஆறுமுக நாவலருக்கு அறிவுரை கூறினதினாலேயே, இவர் "கர்த்தர்" "தேவன்" போன்ற இத்தகைய வார்த்தைகளை தனது மொழிபெயர்ப்பில் உபயோகித்தார்.

தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்புப் பணி முடிந்ததும், பெர்சிவல் பாதிரியார் ஆறுமுகம் பிள்ளையை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். அந்நாட்களில், Phillipus Baldaeus (1632 – 1671) மற்றும் Bartholomeus Ziegenbalg (1682 – 1719) ஆகியோரது முழுமைபெறாத தமிழ் மொழிபெயர்ப்புகளை முன்னுதாரனங்களாகக் கொண்டு,  Philip Fabricius  (1710-1791) மற்றும் C.T.E. Rhenius (1790-1838) ஆகியோர் செய்த வேதாகமத்தின் இரண்டு தமிழ் மொழியாக்கங்கள் காணப்பட்டன. என்றபோதிலும், சென்னையிலிருந்த அறிஞர் மகாலிங்கய்யர் ஆறுமுகம் பிள்ளை மொழிபெயர்த்த வேதாகமத்தையே சிறந்ததென சான்றளிதததுடன், அவரது புலமையையும் பாராட்டினார்.  

வேதாகமத்தை மொழிபெயர்த்தபோதிலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஜனங்கள் மனம் மாறுவதை விரும்பாதவர் அவர். சைவ மதத்தைப் பரப்புவதில் தீவிரமாயிருந்தார் ஆறுமுக நாவலர். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 தனது முதல் சொற்பொழிவினை நிகழ்த்தினார்; தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சொற்பொழிவாற்றிவந்தார். இவரது முயற்சியால் பலர் சிவ தீட்சை பெற்றனர். பல இந்துக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. சைவ சமயத்தைப் பரப்பும் கைப்பிரதிகளை அச்சிட்டு விநியோகித்தார். சைவ சித்தாங்களை மையமாகக் கொண்ட பல நூல்களையும் எழுதினார். வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைபப் பாடசாலையை ஆரம்பித்து, சைவ சமய வளர்ச்சிக்குத் தனது முழு நேரத்தையும் செலவிட தீர்மானித்தவராக, 1848 ம் ஆண்டு தனது ஆசிரியப் பணியினைத் துறந்தார். சைவப் பிள்ளைகளுக்கு பாடநூல்களை அச்சிடுவதற்கான அச்சு இயந்திரத்தினை வாங்குவதற்காக, 1849 ம் ஆண்டு சென்னை சென்றார். அப்போது, திருவாவடுதுறை ஆதீனத்தில் சொற்பொழிவாற்றி நாவலர் பட்டம் பெற்றார். 

ஒருமுறை சென்னை கடற்கரையில் இவர் நடந்து சென்றபோது, அருகே உள்ள குடிசையில் தீ பிடித்தது. நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சாட்சி சொல்ல முற்பட்ட இவரை நீதிபதி தடுத்து தமிழிலேயே பேசும்படியும், நீதிமன்ற அதிகாரி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படியும் ஆணையிட்டார். உடனே நாவலர், 'அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி' என்றார். மொழிபெயர்ப்பாளர் திணறி நின்றபோது, 'சூரியன் உதிப்பதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது' என்று விளக்கமளித்தார் நாவலர்.  வேதாகமத்தை மொழிபெயர்;ததினால், சைவ மதத்தைப் பற்றி பேச நன்கு தெரிந்துகொண்டார். டிசம்பர் 5, 1879 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். 

வேதாகமத்தை தமிழில் மொழியாக்கம் செய்தபோதிலும், இயேசுவே வழி என்பதை அறியாதவராகவே மரித்தார், வேதாகமத்திற்கு எதிரான கைப்பிரதிகளையும், புத்தகங்களையும் எழுதி சைவ சமயத்தின் பாதுகாவலாகவே தன்னை வெளிக்காட்டினார். ஆங்கில வேதாகமத்திலிருந்து தமிழ் வேதாகமத்திற்கு ஒவ்வொரு எழுத்தாய் உருக் கொடுத்தபோதிலும், அவரது உள்ளமோ உண்மையை அறிந்துகொள்ளவில்லை.  தேவாலயத்தையும் கட்டி, பாகாலுக்கான ஆலயத்தையும் கட்டிய சாலமோனைப் போன்றதே இவரது வாழ்க்கை. வேதத்தை மொழிபெயர்த்தும், எதிரணியாகவே இறந்துபோனது இவரது வாழ்வு. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி, இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்துவுக்கென்று தன்னை அர்ப்பணித்த ஹெ.ஆ.கிருஷ;ணப்பிள்ளை, 'இரட்சணிய யாத்திரிகம்' என்ற காப்பியத்தை எழுதி அநேகர் இரட்சகரை அறிந்துகொள்வதற்குக் காரணியாக மாறினதல்லவோ நமக்கு மாதிரி.  

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க