முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலிக்கலாமா?

  

காதலிக்கலாமா?

'காதல் காற்று' என்ற கட்டுரையினை உங்கள் இணையதளத்தில் வாசித்தேன். பல புரிந்துகொள்ளவும், சில ஏற்றுக்கொள்ளவும் கடினமாயிருந்தது. காதைலைப் பற்றி நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்? காதலிக்கலாமா?

காதலிக்கலாம், காதலிக்கக்கூடாது என ஒரு வார்த்தையில் நான் விடையளிக்கவேண்டும், விளக்கமளிக்கவேண்டாம் என நீ எதிர்பார்ப்பதை உனது கேள்வியிலேயே நான் புரிந்துகொண்டேன். 'ஏற்றுக்கொள்ள கடினமாயிருந்தது' என நீ எழுதியிருப்பதிலேயே, நீ காதல் பக்கம் நிற்கிறாய் என்பது தெளிவாகிறது. நெருப்பும் பஞ்சும் சேர்ந்து பெற்றோரைப் பற்றவைப்பதை விட பெற்றோரால் நெருப்பும் பஞ்சும் பற்றவைக்கப்படுவதே இறைவனது நியதி. ஒரு கடையில் உள்ள பொருளை பார்த்து வாங்க விரும்பலாம், பெற்றோரிடம் வாங்கித்தர கேட்கலாம் தவறில்லை; ஆனால், அந்தப் பொருள் கையில் வந்து கிடைப்பதற்கு முன்னால் அதையே நினைத்து கனவு உலகில் மூழ்குவதையே நான் காதல் என்கிறேன். கடைக்காரரும் பெற்றோரும் இணைந்து அப்பொருளைக் உனது கையில் கொடுப்பதற்கு முன்னால் அப்பொருளுக்கும் உனக்கும் எந்த உறவும் உனக்கு இல்லை என்பதை புரிந்துகொள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறுதி நாளும், இரண்டு சொல்லும்

  நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கண்டு நாம் சும்மா இருந்துவிடலாகாது, சத்தியத்துடன் அதைச் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், சமையம் நெருங்கிவிட்டது என்ற சத்தம் அவைகளில் ஒலிப்பதையும், இது கடைசிக்காலம் என்பது அந்த ஒலிக்குள் ஒளிந்திருப்பதையும் ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.  'ஆதார்' என்றால் இன்று அறியாதோர் எவருமில்லை. 'ஆதார்' என்றால் ஓர் மனிதனைக் குறித்த ஆதாரம் என்றே நாம் சொல்லிக்கொண்டாலும், 'ஆதார்' என்ற சொல்லின் அடுத்த பக்கமும் நம் அறிவுக்கு அவசியம். ஆபீப் என்னும் மாதத்தில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் ஜனத்தை விடுதலையாக்கிக் கொண்டுவந்தார் கர்த்தர். இதனை, தலைமுறை தலைமுறையாக நினைவுகூறும் வண்ணம், அதனையே வருடத்தின் முதல் மாதமாகவும் குறித்தார்; அதுவே புதுவருடம், 'ஆண்டவரின் ஆணைப்படி, எகிப்திலிருந்து (பாவத்திலிருந்து) விடுதலையாகாதவர்களுக்கு புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கு இல்லை என்பது அதன் உள்ளர்த்தம்' ஆபீப் மாதத்தைத் தொடர்ந்தே பிற மாதங்கள் கணக்கிடப்பட்டன. எனினும், இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுபோகப்பட்டபோது, அவர்களின் ...

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக...

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         பிரியமானவர்களே!  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை'...