பிறந்தநாள் பாடலில்,
'you look like a monkey' என்று பாடுவது தவறா?
சத்துரு யுக்தியாய் விதைக்கும் சில காரியங்களை ஆவிக்குரிய புத்தியிருந்தால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும். மனிதன் எங்கிருந்து வந்தான்? என்ற கேள்வியையே இன்றும் உலகம் கேட்டுக்கொண்டிருக்கிறது? அத்தகைய ஆராய்ச்சியினை மேற்கொள்ளுவொரை விஞ்ஞானிகள் என்றும், அதைக்குறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானம் என்றும் இன்றைய உலகு வரையறுக்கிறது. எங்கிருந்து வந்தான் மனிதன்? என்ற இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல், இங்கிருந்து வந்தான் என்று எதையோ சுட்டிக்காட்டுவது, புத்திக்கெட்டதற்குத்தான் சமானம். 'மனிதன் குரங்கிலிருந்து வந்தான்' என்று மனிதர்களே மனிதர்களை ஏமாற்றிக்கொள்கின்றனர். என்ற தெருவில் நடந்துகொண்டிருக்கும் ஒரு பிள்ளையிடம், 'உனது அப்பா யார்?' என்று கேட்கும்போது, அக்குழந்தை, தனக்கு அருகில் நின்றுகொண்டிருக்கும் நாயைக் காட்டினால் எப்படியிருக்கும். தேவன், நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி 1:26,27). இந்த சத்தியத்தை, மனிதனின் புத்தியிலிருந்து எடுத்துப்போட பிசாசு எடுக்கும் முயற்சிகள்தான் எத்தனை எத்தனை. அதற்கான ஒரு திட்டமே பிறந்தநாள் பாடல் தடம்மாறிப்போனது.
Happy birthday to you (2)
Happy birthday dear ......
Happy birthday to you
May God bless you dear (2)
May God bless you dear .....
Happy birthday to you
இதுதான் உண்மையான பிறந்தநாள் பாடல், ஆனால் சத்துருவோ இதனுடன்
You born in a zoo (2)
You look like a Monkey
Happy birthday to you
என்பது எதை வெளிக்காட்டுகின்றது? 'நீ மிருகக்காட்சிசாலையில் பிறந்திருக்கிறாய், நீ குரங்கைப்போலிருக்கிறாய்' என்றுதானே. அப்படிப்பாடுவது சந்தோஷமானது அல்ல, சாபமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைப்போன்றதே, ‘April fool’ என்ற திட்டமும். அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் (யோவான் 8:44). பிதாவின் பிள்ளைகளாகிய நம்மை, வருடத்தில் ஒருநாளாவது அவனுடைய பிள்ளைகள் என்று உரிமைபாராட்டிக்கொள்வதற்கு அவன் வைத்த திட்டம் இது. இதற்கு விலைபோய்விடவேண்டாம். நாம் தேவனுடைய ரூபத்தின்படி, தேவ சாயலின்படி உண்டாக்கப்பட்டவர்கள் என்பதில் உறுதியாயிருங்கள். சில கிறிஸ்தவ வீடுகளிலும், ஊழியர்களின் வீடுகளிலும் கூட பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது இப்படி பாடுவதைக் கேட்டு வேதனையடைந்திருக்கிறேன். 'அவரை அறியேன்' என்று பேதுரு மறுதலித்ததுபோல, மறுதலிக்கவேண்டாம். 'அவருடைய பிள்ளைகள்' என்ற ஸ்தானத்தை பிசாசு பறிக்கவிடாதிருங்கள். 'யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை' (யோபு 2:10) என்பதே நமக்கு முன் நிற்கும் மாதிரி. எனவே சங்கீதக்காரனும், 'பொய் உதடுகளுக்கு என்னைத் தப்புவியும்' என்று ஜெபிக்கிறான் (சங். 120:2). பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் (நீதி. 12:22), உதடுகள் அருவருப்பாகிவிட்டால், 'உதடுகளின் காளைகளை நம்மால் செலுத்த முடியுமோ?' (ஓசியா 14:2). 'பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல' (எண். 23:19) எனவே, ஒருவருக்கொருவர் பொய்சொல்லாமலும் இருங்கள் (லேவி 19:11) என்பதுதான் நமது பிதா நமக்குத் தந்த கட்டளை. நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் (லேவி. 11:45) என்பதுதான் நமக்கு விடுக்கப்பட்ட கற்பனை; இந்தக் கற்பலகையினை உடைத்துவிட்டு, கன்றுக்குட்டியையோ, குரங்கையோ உண்டாக்கிவிடாதிருங்கள்.
இயேசு அப்பா பிள்ளைங்களெல்லாம் பொய்ச் சொல்லலாமா? (3)
சொல்லக்கூடாது - என்ற சிறுவயதின்போது நான் கற்ற பாடல்தான் இன்றும் எனது பாடம்.
Comments
Post a Comment