முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழிய அழைப்பைப் பெற்ற நான், அதில் முன்னேறிச் செல்வது எப்படி?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, 

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். சமீபத்தில் நடைபெற்ற ஒரு வாலிபர் கூடுகையில் ஊழிய அழைப்பினை நான் பெற்றிருக்கிறேன்; அதில் முன்னேறிச் செல்வது எப்படி? 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரனுக்கு, 

இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். கர்த்தருடைய ஊழியத்திற்கென்று, கர்த்தரால் நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைப்பு பெற்றமைக்காக ஆண்டவருக்கு நன்றியையும், அத்துடன் அத்துடன் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.

இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பினைப் பெற்று, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற அனைவரும் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களே! இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவர் அருளும் இரட்சிப்பைப் பற்றியும் சக மனிதர்களுக்குச் சாட்சியாக அறிவிக்க வேண்டிய அழைப்பு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு; இதில் எவ்விதத் தளர்வும் விலக்கும் இல்லை. என்றபோதிலும், குறிப்பிட்ட சில பணிகளுக்காக, பிரத்தியேகமாகச் சிலரை தேவன் தனக்கெனத் தெரிந்து கொள்வதுண்டு. நீங்கள் அப்படிப்பட்டவர்களுள் ஒருவராக ஒருவேளை இருக்கக்கூடும் என நான் நம்பி கீழ்க்கண்ட சில ஆலோசனைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.

இப்படிப்பட்ட அழைப்பினை ஒருவேளை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்றால், முதலாவதாக, தேவன் உங்களை எதற்காக அழைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதும், அதிலேயே உங்களை உறுதிப்படுத்திக் கொள்வதும்தான் முதற்பணி; அது உங்களை ஊழியத்தில் அஸ்திபாரமிடவும், எதிர்காலத்தில் ஊன்றக் கட்டிக் கொள்வதற்கும் மிகுந்த உறுதுணையாயிருக்கும். உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற வாக்குத்தத்தங்களிலிருந்தும், உங்களது தாஷந்துகள் மற்றும் அத்துடன் அருளப்பட்டிருக்கும் வரங்களை மையமாகக் கொண்டும், மற்றும் உங்கள் உள்ளத்தில் தேவன் அருளும் பாருங்கள் மற்றும் விருப்பங்களை மையமாகக் கொண்டும் உங்கள் அழைப்பின் ஆரம்பப் பயணம் தொடங்கக் கூடும். அஸ்திபாரம் இடும் பணி உங்களுடையதுதான்; மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம். உங்களது அழைப்பை உறுதிப்படுத்த வாய்ப்பளிக்கும் ஊழியத்தோடு அல்லது ஊழியரோடு இணைந்து நீங்கள் செயல்படவும் தொடங்கலாம். ஒருவேளை, அந்த ஊழியமோ அல்லது ஊழியரோ உங்களது அழைப்பிற்கு ஏற்றதாகக் காணப்பட்டால், உங்கள் ஓட்டத்தை அவர்களோடு கூடத் தொடர்வதில் தடை ஏதும் இல்லை. இல்லையெனில், அவர்களோடு சில காலம் ஊழியத்திற்கான ஆலோசனைகளையும் மற்றும் பயிற்சியையும் பெற்றறிந்து, திடமானதைத் தொடர்ந்து, நீங்கள் உங்கள் ஊழியத்தை தேவன் அருளியது போலத் தனியாகத் தொடர்வதிலும் தவறு ஏதுமில்லை. அழைப்பிலிருந்து மாத்திரம் திசை திரும்பி விடாதபடிக்கு கவனமாய் இருங்கள்; ஏனெனில், அது உங்களை முடிவில் திருப்தியற்றவர்களாக மாற்றி வடும். கூடுமான மட்டும் தனியாக ஓடாமல் குழுவாக ஓட முயற்சிப்பது, உங்களுக்கு ஊழியத்தின் பாதையில் உற்சாகத்தை கொடுக்கும்; சோர்புறும் நேரங்களில் உங்களை ஆறுதல்படுத்தும். உங்கள் பலனை அதிகரிக்கச் செய்யும்; தேவ வல்லமையும் அதிகமதிகமாய் வெளிப்படும். எனவே, உங்கள் தரிசனத்திற்கு இணக்கமுடையோர் இருப்பின், அவர்களையும் உடன் பணியாளர்களாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறுதி நாளும், இரண்டு சொல்லும்

  நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கண்டு நாம் சும்மா இருந்துவிடலாகாது, சத்தியத்துடன் அதைச் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், சமையம் நெருங்கிவிட்டது என்ற சத்தம் அவைகளில் ஒலிப்பதையும், இது கடைசிக்காலம் என்பது அந்த ஒலிக்குள் ஒளிந்திருப்பதையும் ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.  'ஆதார்' என்றால் இன்று அறியாதோர் எவருமில்லை. 'ஆதார்' என்றால் ஓர் மனிதனைக் குறித்த ஆதாரம் என்றே நாம் சொல்லிக்கொண்டாலும், 'ஆதார்' என்ற சொல்லின் அடுத்த பக்கமும் நம் அறிவுக்கு அவசியம். ஆபீப் என்னும் மாதத்தில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் ஜனத்தை விடுதலையாக்கிக் கொண்டுவந்தார் கர்த்தர். இதனை, தலைமுறை தலைமுறையாக நினைவுகூறும் வண்ணம், அதனையே வருடத்தின் முதல் மாதமாகவும் குறித்தார்; அதுவே புதுவருடம், 'ஆண்டவரின் ஆணைப்படி, எகிப்திலிருந்து (பாவத்திலிருந்து) விடுதலையாகாதவர்களுக்கு புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கு இல்லை என்பது அதன் உள்ளர்த்தம்' ஆபீப் மாதத்தைத் தொடர்ந்தே பிற மாதங்கள் கணக்கிடப்பட்டன. எனினும், இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுபோகப்பட்டபோது, அவர்களின் ...

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக...

வேதத்தை முறைப்படி வாசிப்பது, புரிந்துகொள்வது எப்படி?

  வேதத்தை முறைப்படி வாசிப்பது,   புரிந்துகொள்வது எப்படி? - 1 வேதம் என்பது நமது கையில் கொடுக்கப்பட்ட இறைவனின் பாடப்புத்தகம். தேவன் மனிதனைப் படைத்த நாட்களில் தேவனே அவனுக்கு எல்லாமாயிருந்தார், மனிதன் பாதை மாறியபோது நியாயப் பிரமாணங்களைக் கொடுத்து, மனிதனுக்கு பாதையைக் காட்டிக்கொடுத்தார். நியாப்பிரமாணங்கள் கட்டளைகளாகவே பாவிக்கப்பட்டன. நியாப்பிரமாணத்தின் அந்நாட்களில், சட்டத்தை மீறுபவனுக்கு சட்டென தண்டை கிடைக்கும். அவ்வகை நியாயப்பிரமாணங்களில் மனிதர்கள் கட்டுண்டவர்களாயிருந்தார்கள். பிரமாணத்திற்கு பலர் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும், சட்டத்திற்கு மறைவாய் தவறு செய்யும் அளவிற்கு மனிதனின் மனநிலையை பாவம் சுருட்டி வைத்திருந்தது. கொலை செய்தாலோ, திருடினாலோ, விபச்சாரம் செய்தாலோ அது தெரியவந்தால் மாத்திரமே அவன் தண்டிக்கப்படுவான். தெரியவில்லையென்றால், மறைத்து தப்பித்துக்கொள்ளுவான், ஆனால், தண்டனையை நேரடியாக தேவனிடமிருந்து பெறும் நிலைக்குத் தன்னைத் தள்ளிக்கொள்ளுவான். நியாயப்பிரமாணங்களுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்படாத மனிதனிடத்தில் அநேக தாசர்களைக் கொண்டு தேவன் பேசினார், எழுதிக்கொடுத்தார், அப்படியே, ஆவி...